“ஆணுறை இல்லை என்றால் அபராதம் போடுகிறார்கள்” - டெல்லி ஓட்டுநர்கள்  

“ஆணுறை இல்லை என்றால் அபராதம் போடுகிறார்கள்” - டெல்லி ஓட்டுநர்கள்  
“ஆணுறை இல்லை என்றால் அபராதம் போடுகிறார்கள்” - டெல்லி ஓட்டுநர்கள்  
Published on

கார்களிலுள்ள முதலுதவி பெட்டியில் ஆணுறை இல்லாவிட்டால் போலீஸ் அபராதம் போடுகிறார்கள் என்று ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

போக்குவரத்து விதிகளை மீறினால் பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையிலான திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதனால் சீட்பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் என பல்வேறு விதிமீறல்களுக்கு பன்மடங்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் விதியை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதம் வசூலிக்க போலீசாரும் தீவிர கண்காணிப்பிலும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லியிலும் வாகனசோதனை நடைபெற்று வருகிறது. அதில் போலீசார் கார்களை சோதனை செய்யும்போது அதிலுள்ள முதலுதவி பெட்டிகளில் ஆணுறை இல்லையென்றால் அபராதம் போடுகிறார்கள் என கார் ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும், “ஆணுறை பாதுகாப்பான உடலுறவுக்கு பயன்படுகிறது. கார்களின் குழாய்களில் திடீரென வெடிப்பு ஏற்பட்டால் கசிவை நிறுத்துவதற்கு ஆணுறை பயன்படுத்தப்படுகிறது. மழை நேரங்களில் ‘ஷூ’க்களை பாதுகாப்பாக வைக்க பயன்படுகிறது. ஏதேனும் காயம் ஏற்பட்டால் ரத்தகசிவை நிறுத்தவும் பயன்படுகிறது. ஆனால் காண்டத்தின் பயன்பாடுகள் குறித்து போக்குவரத்து காவலர்களுக்கு தெரியவில்லை. அவர்களிடம் கேட்டால் பதில் தெரியாமல் சிரிக்கிறார்கள். ஆனால் அபராதம் மட்டும் வசூலிக்கிறார்கள்” எனத் தெரிவிக்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com