குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக இதுவரை நடைபெற்ற போராட்டங்களின்போது 19 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தரப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களின்போது 19 பேர் உயிரிழந்ததாகவும், 61 பேருக்கு குண்டு காயங்கள் ஏற்பட்டதாகவும் உத்தரப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. போராட்டங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்ட 124 பேர் கைது செய்யப்பட்டதாதகவும் அறிவித்துள்ளது.
அத்துடன் 9 ஆயிரத்து 372 ட்விட்டர் கணக்குகளும், ஒன்பதாயிரத்து 856 ஃபேஸ்புக் கணக்குகளும், 181 யூ-டியூப் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளதாகவும் உ.பி காவல்துறை கூறியுள்ளது. போராட்டங்களின் போது, காவல் துறையை சேர்ந்த 288 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.