குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய 498 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
லக்னோ, மீரட், கான்பூர், முசாஃபர் நகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் பொதுச் சொத்துகளை சேதப்பத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இதுவரை 498 பேர் அடையாளம் கணப்பட்டுள்ளனர். பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடமிருந்து அதற்கான தொகை வசூலிக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்கெனவே கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
இதனிடையே, உத்தரப்பிரதேசத்தில் இன்றும் போராட்டம் நடத்தப்போவதாக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், லக்னோவில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.