“cVIGIL புகார் செயலி மூலம் 1.25 லட்சம் புகார்கள் கிடைத்துள்ளன” - இந்திய தேர்தல் ஆணையம்!

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கபட்ட பிறகு இந்திய தேர்தல் ஆணையத்தின் சி விஜில் புகார் செயலி மூலம் தமிழ்நாட்டில் 2,168 புகார்களும், இந்தியா முழுவதும் 1,25,939 புகார்களும் வந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
சி விஜில்
சி விஜில்முகநூல்
Published on

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி, இந்திய தேர்தல் ஆணையம் சி விஜில் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் நாடு முழுவதும் பணம், பரிசு பொருட்கள் விநியோகம், தேர்தல் விதி மீறல், அனுமதி இல்லாமல் வீட்டு சுவற்றில் அரசியல் கட்சி சின்னம் வரைதல் உள்ளிட்டவை குறித்து புகார்களை மக்களே செயலி மூலம் அளிக்க முடியும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் பெரும்பாலான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாகவும் தற்போது 388 புகார்கள் மட்டுமே விசாரனையில் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2,168 புகார்கள் வந்தத்தில் 2,139 புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி விஜில்
இந்தியாவுக்கு கிடைத்தது 4000 ச.கி.மீ! கச்சத்தீவு விவகாரத்தின் பின்னணியில் இவ்வளவு உண்மைகள் இருக்கா!

மேலும் இந்தியா முழுவதும் 1,25,939 புகார்களும் வந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 29 புகார்கள் மட்டுமே தற்போது விசாரனையில் இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறபட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com