4 மக்களவை, 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்

4 மக்களவை, 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்

4 மக்களவை, 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்
Published on

காலியாக உள்ள 4 மக்களவை தொகுதிகள் மற்றும் 10 மாநிலங்களில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது

மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மற்றும் பந்தாரா - கோண்டியா, உத்தரப்பிரதேச மாநிலம் கைரானா மற்றும் நாகாலாந்து ஆகிய 4 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிது. ‌இதில் நாகாலாந்து தவிர 3 தொகுதிகளும் பாரதிய ஜனதா வசமிருந்தவை. ஜார்கண்ட் மாநிலத்தில் 2 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், மேகாலயா, பீகார், உத்தராகண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரா, கேரளா, ஆகிய மாநிலங்களில் ஒரு சட்டப்பேரவை தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதேபோல் தேர்தல் ரத்து செய்யப்பட்ட கர்நாடக மாநிலத்தின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மே 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இந்த நிலையில் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தலை நடக்க விடாமல் தடுக்க பாரதிய ஜனதா முயல்வதாக காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தலுக்கு முந்தைய நாள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரவி கவுடா என்பவர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தி அதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி தங்களை மிரட்ட பார்ப்பதாகவும் அவர் புகார் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com