தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்திற்கு களங்கம் விளைவிப்பது என்றும், அது துரோகிளால் கட்டப்பட்டது என்றும் பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தாஜ்மஹாலை, உத்தரப் பிரதேச அரசு சுற்றுலா பட்டியலில் இருந்து சமீபத்தில் நீக்கியது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்திற்கு களங்கம் விளைவிப்பது என்றும், அது துரோகிளால் கட்டப்பட்டது என்றும் சங்கீத் சோம் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம், தாஜ்மஹாலை கட்டிய ஷாஜகான் அவருடைய தந்தையையே சிறை வைத்தவர் என்றும், தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தின் மீது படிந்துள்ள கறை என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது எனவும், இஸ்லாமியர்களை நமது வரலாற்றில் இருந்தே அகற்ற வேண்டும் எனவும் சங்கீத் சோம் குறிப்பிட்டுள்ளார். காதல் நினைவு சின்னமாக கருதப்பட்டு வரும் தாஜ்மஹாலை பற்றி பாஜக எம்.எல்.ஏ கூறியுள்ள இத்தகைய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.