2021-22 பட்ஜெட் குறித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் விமர்சனங்களுக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்திருக்கிறார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் விமர்சனங்களுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன் “முதலீட்டுக்கான செலவுகள் இந்த பட்ஜெட்டில் குறைவாக உள்ளதாகவும், 2007 ஆம் வருடத்திலேயே அதிகபட்சமாக செலவிடப்பட்ட தாகவும் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தது தவறான தகவல்” என பதிலடி கொடுத்தார் .
முன்னதாக, 2021-22 மத்திய பட்ஜெட் குறித்து பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் “மத்திய பட்ஜெட் மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. இந்த பட்ஜெட் பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள ஒரு சதவீத மக்கள் நாட்டின் 73 சதவீத சொத்துக்களை கொண்டிருக்கின்றனர்” என தெரிவித்திருந்தார்