மலிவுவிலை வீடு திட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
அவர் தனது பட்ஜெட் உரையில், பிரதமர் குடியிருப்பு திட்டம் என்ற மலிவு விலை வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், மலிவுவிலை வீடுகளுக்கான சலுகைகள் பெறுவதில் உள்ள நிபந்தனைகள் தளர்த்தப்படும் என கூறிய அவர், புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும் எனவும் அருண் ஜேட்லி கூறினார்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் பயன்பெறும் வகையில், கிராமப்புறத்தில் வீடு கட்டும் திட்டத்திற்கு கடன் வட்டி குறைக்கப்படும் எனவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.