பிஎஸ்என்எல்-ல் விருப்ப ஓய்வு கேட்டு 78,300 பேர் விண்ணப்பம்?

பிஎஸ்என்எல்-ல் விருப்ப ஓய்வு கேட்டு 78,300 பேர் விண்ணப்பம்?
பிஎஸ்என்எல்-ல் விருப்ப ஓய்வு கேட்டு 78,300 பேர் விண்ணப்பம்?
Published on

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற 78 ஆயிரத்து 300 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்-ம் எம்.டி.என்.எல்-ம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. கடந்த நிதியாண்டு மட்டும் இவற்றின் நஷ்டம் 18 ஆயிரத்து 300 கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில் இதை சரி செய்வதற்காக கடந்த நவம்பர் 4ம் தேதி விருப்ப ஓய்வு திட்டம் தொடங்கியது.

விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பி.எஸ்.என்.எல்லில் 78 ஆயிரத்து 300 பேரும், எம்.டி.என்.எல்லில் 14 ஆயிரத்து 378 பேரும் மொத்தம் 92 ஆயிரத்து 700 பேர் விருப்ப ஓய்வு கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பி.எஸ்.என்.எல் பணியாளர்களுக்கு தற்போது ஆண்டுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், விருப்ப ஓய்வு திட்டத்திற்கு பின் அது 7 ஆயிரம் கோடி ரூபாயாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பின் பி.எஸ்.என்.எல் பணியாளர்கள் எண்ணிக்கை சரிபாதியாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதே போல டெல்லி, மும்பையில் மட்டும் சேவை தந்து வரும் எம்.டி.என்.எல் நிறுவனமும் விருப்ப ஓய்வு திட்டம் மூலம் ஆண்டுக்கு ஆயிரத்து 800 கோடி ரூபாய் சேமிக்கும் எனத் தெரிகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com