கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால், குழந்தைகளும், முதியவர்களும், தொடர் சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். பெரும்பாலும் பொதுமக்கள் வெயில் அதிகமுள்ள நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வந்தது என்றபோதிலும் ஆங்காங்கே மழை அவ்வபோது பெய்து கோடையை சில தினங்களாக குளிர்விக்கிறது. இந்நிலையில் வடமாநிலங்களில் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது.
முன்னதாக தமிழகத்தில் அதிக வெப்பம் காரணமாக, கடந்த மாதம் கரூர் மாவட்டத்தில் ஒருவர் வெயிலில் சாலையில் முட்டையை உடைத்து ஆம்லேட் போடும் காணொலி வைரலாகியது குறிப்பிடத்தக்கது. அது போலி என கூறப்பட்ட போதிலும், அந்தளவுக்கு வெயில் அடித்தது உண்மைதான்!
அதேநேரத்தில், இந்த காணொலிக்குப் பிறகு சேலத்தில் வெயில் அதிகரித்ததைக் காட்டுவதற்காக கலெக்டர் ஆபிஸ் முன்பு வெறும் தரையில் முட்டையை ஊற்றி ஆம்லேட் போட முயன்ற நபர்களை போலீஸார் பிடித்தச் செய்தியும் வைரலானது.
இதையும் படிக்க: “மேட்சுல வயசாயிடுச்சுனு யாரும் பாவம் பார்க்க மாட்டாங்க..” வெளிப்படையாகப் பேசிய தோனி!
இந்த நிலையில், ராஜஸ்தான் பாலைவனப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப்படை வீரர் ஒருவர், வெயிலில் அப்பளம் சுட்டு எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பாலைவனத்தின் மணலில் ஒரு அப்பளத்தை வைத்து அதில் மண்ணைப் போட்டு மூடுகிறார். பின்னர், அதை வெளியே எடுக்கும்போது அது மொறுமொறுவென பொரிந்துவிடுவதை எடுத்துக் காட்டுகிறார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குட்பட்ட எல்லைப் பகுதியான பிகானேர், பாகிஸ்தானின் கிழக்கு எல்லையாகவும் உள்ளது. இதனால் எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இந்தியாவில் கோடை காலம் என்பதால், ராஜஸ்தானின் ஒருசில பகுதிகளில் வழக்கத்தைவிட வெப்பநிலை அதிகரித்துள்ளது. அந்தவகையில் பிகானேர் பகுதியில் 47 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க: தோனி இல்லாத CSK? ரசிகர்களுக்கு சாத்தியமா.. சங்கடமா? மாற்றுவதற்கான வழி என்ன?