1788 அறைகள் கொண்ட அரண்மனையில் பிரமாண்ட ஏற்பாடு; திரும்பி பார்க்க வைத்த புரூனே இளவரசரின் திருமண விழா!

1788 அறைகள் கொண்ட அரண்மணையில் புரூனே இளவரசரது திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.
brunei
bruneipt web
Published on

புருனே நாட்டின் இளவரசர் அப்துல் மாதின், அரச வம்சாவளி அல்லாத குடும்பத்தைச் சேர்ந்த தனது காதலியை கரம்பிடித்து உலகத்தை ஈர்த்துள்ளார். உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரும், மிகப்பெரிய செல்வந்தருமான சுல்தான் ஹசனல் போல்கியாவின் 10ஆவது குழந்தைதான் இளவரசர் அப்துல் மாதின்.

இவர் பெரும்பாலும் இங்கிலாந்து இளவரசர் ஹாரியுடன் ஒப்பிடப்படுவார். காரணம் மாதினும் ஹெலிகாப்டர் பைலட்டாக புருனே விமானப்படையில் பணியாற்றி வருகிறார். பிரிட்டனின் ராயல் மிலிட்டரி அகாடமி சான்ட்ஹர்ஸ்டில் பட்டம் பெற்றவர். அத்துடன் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புருனே நாட்டிற்காக போலோ விளையாட்டிலும் களம் கண்டவர்தான் இளவரசர் அப்துல் மாதின்.

இந்த நிலையில் தான் 32 வயதான இளவரசர் அப்துல் மாதின் 29 வயதான தனது காதலி யாங் முலியா அனிஷா ரோஸ்னாவை கரம்பிடித்துள்ளார். சுல்தானின் சிறப்பு ஆலோசகரின் பேத்தி அனிஷா ரோஸ்னா என்பது குறிப்பிடத்தக்கது. பந்தர் செரி பெகவானில் உள்ள தங்க குவிமாடம் கொண்ட மசூதியில் இஸ்லாமிய முறைப்படி இந்த திருமணம் நடந்தது. இந்த திருமணவிழா ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 16 ஆம் தேதி முடிவடைகிறது.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. திருமண நிகழ்ச்சிகள் சுமார் ஆயிரத்து 788 அறைகள் கொண்ட அரண்மனையில் கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. வரும் 16ஆம் தேதி வரை நடைபெறும் அரசு குடும்ப திருமண விழாவில் பல்வேறு நாடுகளின் அரச குடும்பத்தினர் பங்கேற்க உள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை, 1788 அறைகள் அரண்மனையில் ஊர்வலத்துடன் நடைபெற்று முடிகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com