நாடு முழுவதும் இன்று முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்!

நாடு முழுவதும் மூன்று புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.
புதிய குற்றவியல் சட்டங்கள்
புதிய குற்றவியல் சட்டங்கள்முகநூல்
Published on

இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதி சாக்ஷியா, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா போன்ற புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

புதிய குற்றவியல் சட்டங்கள்
புதிய குற்றவியல் சட்டங்கள்

1) பாரதிய நியாய சன்ஹிதா

இந்திய குற்றவியல் சட்டம் 1860க்கு மாற்றான, பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டத்தில், தேசத்துரோகம் என்பது நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பிரிவினைவாதம், கிளர்ச்சி, இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக தண்டனை வழங்கும் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

இச்சட்டம் சிறுவர்களை கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்குதல் மற்றும் கும்பலாக அடித்து கொலை செய்வதற்கு மரண தண்டனை வழங்க வகை செய்கிறது. முதல் முறையாக தண்டனைகளில் ஒன்றாக சமூக சேவையும் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய குற்றவியல் சட்டங்கள்
'UPSC தேர்வு' எழுதாமலேயே ஐஏஎஸ் அதிகாரி ஆனாரா? - சர்ச்சை குறித்து ஓம் பிர்லா மகள் கொடுத்த விளக்கம்!

2) பாரதிய நாகரிக் சுரக்ஷா

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு மாற்றாக பாரதிய நாகரிக் சுரக்ஷா 2023 சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி கால வரையறைக்குள் விசாரணை மற்றும் வாதங்கள் நடத்தப்பட வேண்டும்.

விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்களின் வருமானம் மற்றும் சொத்துகளை இணைக்கும் புதிய வழிமுறை சேர்க்கப்பட்டுள்ளது.

3) பாரதிய சாக்ஷியா

இந்திய சாட்சிகள் சட்டம் 1972க்கு மாற்றாக பாரதிய சாக்ஷியா 2023 சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சாட்சிகளில், மின்னணு அல்லது டிஜிட்டல் ஆவணங்கள், மின்னஞ்சல்கள், சர்வர் பதிவுகள், கணினி, மடிக்கணினி, குறுஞ்செய்திகள், இணையதளங்கள், சம்பவம் நடந்த இடத்தின் சான்றுகள், அஞ்சல்கள், சாதனங்களில் உள்ள செய்திகள் ஆகியவை அடங்கும். வழக்கு ஆவணம், முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை மற்றும் தீர்ப்புகள் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். காகித ஆவணங்களைப் போலவே டிஜிட்டல் மற்றும் மின்னணு ஆவணங்களும் சட்ட அங்கீகாரம் பெறும்.

புதிய குற்றவியல் சட்டங்கள்
வெளுத்து வாங்கிய கனமழை; சாலை உடைந்து உள்வாங்கியதால் வெள்ளாக்காடாக காட்சியளிக்கும் குஜராத்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com