‘பிராமண வீரர்களுக்கான கிரிக்கெட்' - சர்ச்சைக்குள்ளான ஹைதராபாத் டோர்னமென்ட்

‘பிராமண வீரர்களுக்கான கிரிக்கெட்' - சர்ச்சைக்குள்ளான ஹைதராபாத் டோர்னமென்ட்
‘பிராமண வீரர்களுக்கான கிரிக்கெட்' - சர்ச்சைக்குள்ளான ஹைதராபாத் டோர்னமென்ட்
Published on

ஹைதராபாத்தில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த வீரர்களுக்காக மட்டும் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி ஒன்று சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் என்பது வெறும் விளைாட்டு அல்ல, அது ஒரு உணர்வுபூர்வமான அங்கமாக இளைஞர்களால், ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. அந்தளவிற்கு இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கிரிக்கெட் விளையாட்டிற்கு ஏகோபித்த ஆதரவு உண்டு. ஆனால் ஹைதராபாத்தில் நடந்த ஒரு கிரிக்கெட் டோர்னமென்ட் ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பிரிவினருக்காக நடத்தப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.   

கடந்த டிசம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் ஹைதராபாத்தில் உள்ள பி.எஸ்.ஆர். விளையாட்டு மைதானத்தில், பிரமாணர் சமூகத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் கிரிக்கெட் டோர்னமென்ட் ஒன்று உள்ளூர் கிளப்புகளால் நடத்தப்பட்டுள்ளது.  

இந்த போட்டிக்கான அறிவிப்பு குறித்து ஒட்டப்பட்ட சுவரொட்டி மூலமே இந்நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த சுவரொட்டியில் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் தங்கள் அடையாளத்திற்கான ஆதாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், பிரமாணர் தவிர்த்து வேறு சமூக வீரர்களுக்கு அனுமதியில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த சுவரொட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த கிரிக்கெட் போட்டிக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே, சில கிரிக்கெட் வாரியங்களில் பிராமண சமூகத்தினருக்கு அதிகம் முன்னுரிமை அளிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் கூட அப்படியான நிலைமை இருப்பதை சுட்டிக்காடி சுசீந்திரன் இயக்கத்தில் ஜீவா என்ற திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com