உ.பி : 180 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு

உ.பி : 180 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு
உ.பி : 180 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு
Published on

உத்தரப்பிரதேசத்தில் 180 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன், 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டான்.

ஆக்ரா அருகே தாரியை என்ற கிராமத்தைச் சேர்ந்த சோட்லால் என்பவரின் 4 வயது சிறுவன் ஷிவா, வீட்டின் அருகே திறந்தவெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு மூடப்படாமல் இருந்த 180 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளான். இதைப் பார்த்து அதிர்ந்து போன தந்தை அபயக்குரல் எழுப்ப, அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்தனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் நிகழ்விடத்துக்கு வந்தனர்.

ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் இருந்த இடத்தை அறிந்த மீட்புக் குழுவினர், ஆக்ஸிஜன் கொடுத்தனர். குழாய் மூலம் குளுகோசும் வழங்கினர். இதனிடையே சிறுவன் விழுந்த இடத்துக்கு அருகே மற்றொரு குழி தோண்டப்பட்டது. ஒரு நொடியைக் கூட வீணாக்காமல், வெவ்வேறு உத்திகளைக் கையாண்ட மீட்புக் குழுவினர், 6 மணி நேரம் தொடர்ந்து போராடி சிறுவன் ஷிவாவை பத்திரமாக மீட்டனர். உடனடியாக சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் சோர்வாக இருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com