“தம்பி நாங்க வந்துட்டோம்” ஜெய்ப்பூரில் கடத்தப்பட்டு ஹிமாச்சலில் இருந்த இளைஞர்.. பிறந்தநாளில் மீட்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடத்தப்பட்ட இளைஞர் ஒருவர் இமாச்சலப் பிரதேசத்தில் அவரது பிறந்த நாளின்போது மீட்கப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட இளைஞர்
கடத்தப்பட்ட இளைஞர்pt web
Published on

கடத்தப்பட்ட அனுஜ்

ஆகஸ்ட் 18-ஆம் தேதி அனுஜ் என்ற இளைஞர் தனது நண்பருடன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நஹர்கர் மலைக்குச் சென்றுள்ளார். அவரது உடைகளைக் கவனித்த கடத்தல்காரர்கள் பணக்கார வீட்டு பையனாக இருக்கலாம் என எண்ணியுள்ளனர். இதனையடுத்து அனுஜின் கைகள், கால்கள் மற்றும் வாயைக் கட்டி வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். அனுஜ் உடன் சென்ற நண்பரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

அனுஜ் நெடுநேரமாக வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் காவல்துறையில் புகாரளித்துள்ளனர். புகாரைப் பெற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்த பிரம்மபுரி காவல்துறையினர், நஹர்கர் கோட்டை முழுவதும் ட்ரோன் கொண்டு தேடியுள்ளனர். அதேசமயத்தில் ஆரம்பக்கட்ட விசாரணைகளும் நடந்தன. முடிவில் பல்வேறு குழுக்களை அமைத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, அனுஜின் குடும்பத்தினருக்கு கடத்தல் காரர்களிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. ரூ.20 லட்சம் கொடுத்தால் மட்டுமே மகன் கிடைப்பான் என கடத்தல்காரர்கள் அனுஜின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு பெற்றோர்கள், பணத்தை உடனடியாக வழங்க முடியாது என்றும், பணத்தை ஏற்பாடு செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

பெண் உட்பட 5 பேர் கைது

இந்த சமயத்தில், காவல்துறையினர் கடத்தல்காரர்களின் எண்களை வைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். ஆனால், கடத்தல்காரர்கள் தங்களது இடத்தினை மாற்றியபடியே வந்துள்ளனர். மீண்டும் அனுஜின் பெற்றோரை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், கல்கா - சிம்லா எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசிப் பெட்டியில் பணத்தை வைக்குமாறு தெரிவித்துள்ளனர்.

இதைப் பயன்படுத்திக் கொண்ட காவல்துறையினர், தரம்பூர் ரயில்நிலையம் அருகில் வைத்து கடத்தல்காரர்களில் ஒருவரை கைது செய்தனர். அவரிடம் விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்ற கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

அனுஜ் பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த ஹோட்டலையும் கண்டுபிடித்தனர். ஹோட்டல் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஹோலன் எனும் மாவட்டத்தில் அமைந்திருந்தது. இந்த விவகாரத்தில் மொத்தமாக 5 பேரை கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

கடத்தப்பட்ட இளைஞர்
மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பிய ஜாகீர் கான்.. லக்னோ அணி ஆலோசகராக நியமனம்!

பிறந்த நாளின்போது மீட்கப்பட்ட அனுஜ்

அனுஜ் வைக்கப்பட்டிருந்த அறையை திறந்தபோது, கடத்தல்காரர் ஒருவருடன் அனுஜ் தூங்கிக் கொண்டிருந்தார். கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு திகைத்த அனுஜிடம், நாங்கள் ஜெய்ப்பூர் போலீஸ், உனக்காகவே இங்கு வந்துள்ளோம் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி அனுஜ் மீட்கப்பட்ட நாள் அவரது பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்களை விசாரித்ததில், வீரேந்திர சிங் என்பவர் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவர் சாஃப்ட்வேர் இன்ஜினியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது பழைய கூட்டாளிகளுடன் இணைந்து இந்த கடத்தல் திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். இந்த விபரத்தை ஜெய்ப்பூர் காவல்துறை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. ஜெய்ப்பூர் காவல்துறையின் செயல்பாடு மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

கடத்தப்பட்ட இளைஞர்
2025க்குள் 6 லட்சம் பேருக்கு வேலை.. அதில் 70% பெண்களுக்கு வாய்ப்பு.. அதிரடியில் ஆப்பிள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com