விமானிகள், பணியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தாலும், ஓராண்டு கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்று விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
ஓராண்டுக்கு விமானிக்கு கொடுக்கப்படும் பணிகளை அவர் ஏற்க மறுக்கக் கூடாது. அதே நேரத்தில் விமானிக்கு வழங்கப்படும் சலுகைகளை விமான நிறுவனம் குறைக்கவோ ரத்து செய்யவோ கூடாது என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை விமானிகள் தங்களது பணியை ராஜினாமா செய்ய விரும்பினால், 6 மாதத்துக்கு முன்பு தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடம் தெரிவித்தால் போதுமானதாக இருந்தது. ஒரு வேளை விமான நிறுவனம் விரும்பினால் சம்பந்தப்பட்ட விமானி முன்கூட்டியே பணியில் இருந்து விலகுவதற்கு அனுமதி அளித்து அவரது ராஜினாமாவை உடனடியாக ஏற்கலாம்.