இந்திய - பாக்., எல்லையில் சுரங்கப்பாதை - மணல் மூட்டைகளில் பாகிஸ்தான் தொடர்புடைய பெயர்கள்.!

இந்திய - பாக்., எல்லையில் சுரங்கப்பாதை - மணல் மூட்டைகளில் பாகிஸ்தான் தொடர்புடைய பெயர்கள்.!
இந்திய - பாக்., எல்லையில் சுரங்கப்பாதை - மணல் மூட்டைகளில் பாகிஸ்தான் தொடர்புடைய பெயர்கள்.!
Published on

இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் பெயர் கொண்ட மூட்டைகளால் நிரப்பப்பட்ட சுரங்கப்பாதை ஒன்று பாதுகாப்பு படைவீரர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் 20 அடி ஆழமும், 4 அடி அகலும் கொண்ட சுரங்கப்பாதை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து இராணுவத்துறை மூத்த அதிகாரி ஒருவர்  கூறும் போது “ இந்தச் சுரங்கப் பாதையில் பிளாஸ்டிக் பைகளில் நிரப்பப்பட்ட மணல் மூட்டைகள் இருந்தது. அந்த மூட்டைகளில் பாகிஸ்தானின் கராய்ச்சி மற்றும் ஷகர்கர் ஆகிய இடங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இந்த மணல் மூட்டைகள் சுரங்கப்பாதையின் நுழைவுப் பகுதியில் மறைக்கப்பட்டிருந்தது” எனக் கூறியுள்ளார்.

இந்த சுரங்கப்பாதையானது இந்திய பாகிஸ்தான் எல்லையிலிருந்து 170 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. ஜம்முவில் மழை பெய்ததையொட்டி அங்குள்ள சில நிலப்பகுதிகள் மூழ்குவதை பார்த்த அதிகாரி ஒருவர் இத்தகவலை இராணுவத்தலைமைக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த ஜென்ரல் என்.எஸ். ஜாம்வால் அதனை பார்வையிட்டு, அப்பகுதியில் இயந்திரத்தை வைத்து தோண்ட உத்தரவிட்டார். அப்போது இந்தச் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவர் கூறும் போது “ சுரங்கப்பாதையில் கைப்பற்றப்பட்ட மணல் மூட்டைகளின் இடம்பெற்றிருந்த தேதிகளை வைத்துப் பார்க்கும் போது சுரங்கப்பாதை புதிதாக தோண்டப்பட்டதாக தெரிகிறது என  கூறினார். இந்தச் சுரங்கப் பாதையானது பாகிஸ்தான் எல்லையிலிருந்து 700 மீட்டர் தொலைவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com