மேலும் காவல்துறையினர் சுசித்ராவின் தொலைபேசி அழைப்புகளை ஆராயத் தொடங்கியுள்ளனர். அப்போது அவர் பாலக்காட்டில் உள்ள பிரசாந்த் என்ற இசை ஆசிரியரை தொடர்பு கொண்டதைக் கண்டறிந்தார். பின்னர் கொல்லத்தைச் சேர்ந்த குற்றப்பிரிவு அதிகாரிகள் குழு ஒன்று விசாரணைக்காக பாலக்காடு விரைந்தது. அங்கே பிரசாந்திடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தான்தான் இந்தக் கொலையைச் செய்ததாக பிரசாந்த் ஒப்புக்கொண்டதாகவும் ஆகவே அவரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சுசித்ராவின் உடலை, கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்டு, பாதி எரிக்கப்பட்ட நிலையில் போலீசார் கண்டெடுத்துள்ளனர். மேற்கண்ட விசாரணையில் கடந்த மார்ச் 18 ம் தேதி பிரசாந்த், தனது குடும்பத்தினரை வெளியே அனுப்பிவிட்டு, சுசித்ராவுடன் அவரது இல்லத்தில் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.