இந்தியா
தமிழ்நாடு, ஆந்திர கூட்டுறவு வங்கிகளில் கறுப்புப்பணம்? - விசாரணையை முடுக்கிவிடும் வருமானவரி சோதனை!
தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச கூட்டுறவு வங்கிகளில் ரூ.380 கோடி சட்டவிரோத பணப்புழக்கம் நடந்திருப்பதாக வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா உட்பட 12 கூட்டுறவு வங்கிகளில் , சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருவதாகவும், இவ்வங்கிகளில் கறுப்புப்பணம் பதுக்கப்படுகிறது என்ற தகவலின் அடிப்படையிலும் வருமானவரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.
வருமானவரித்துறை தற்பொழுது 12 கூட்டுறவு வங்கிக்கணக்குகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. அதன்படி, தமிழ்நாடு, ஆந்திராமாநிலங்களில் அரசியல் கட்சிகளின் வங்கி கணக்குகளில் பணம் பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, செயல்படாத கட்சிகளின் வங்கிகணக்கு மூலமாக கறுப்புப்பணம் பதுக்கப்படுகிறது என்றம் குற்றம் சாட்டப்படுகிறது.