அடுத்த சிக்கல்|கார்கே மகன் மீது நிலமுறைகேடு புகார்.. பாஜக குற்றச்சாட்டு; மறுக்கும் கர்நாடக காங்கிரஸ்

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்ட விவகாரம் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அடுத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகனுக்கு எதிராகவும் மற்றொரு புகார் கிளம்பியுள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கேஎக்ஸ் தளம்
Published on

முடா எனப்படும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வழங்கப்பட்ட நிலத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்திருப்பதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் சித்தராமையா மீது விசாரணை நடத்த ஆளுநர் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். இது, கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸாரும், முதலமைச்சர் பதவியிலிருநது சித்தராமையா பதவி விலக கோரி பா.ஜனதாவினரும் போட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த பிரச்னை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு நிலமோசடி புகார் எழுந்துள்ளது. அது, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகனுக்கு எதிராகக் கிளம்பியுள்ளது. மல்லிகார்ஜுன் கார்கே குடும்பத்தினரால் நடத்தப்படும் சித்தார்த்த விஹாரா அறக்கட்டளைக்கு, பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்காவில், பட்டியலின ஒதுக்கீட்டின்கீழ், குடிமை வசதிகளுக்காக மொத்தம் 45.94 ஏக்கர் கேஐஏடிபி நிலத்தில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதையும் படிக்க: ’1 கிலோ ஜிலேபி வாங்கி வா’- புகார்கொடுக்க சென்றவரிடம் உத்தரவிட்ட போலீஸ்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்!

மல்லிகார்ஜுன கார்கே
முடா முறைகேடு|அதிகாரத்தை கையில் எடுத்த ஆளுநர்.. மறுக்கும் முதல்வர்.. கர்நாடக அரசியலில் புயல்!

மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் ராகுல் கார்கேவுக்கு கர்நாடகா அரசின் விமானவியல் பூங்காவில் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக பாஜக, ஜேடிஎஸ் ஆகிய கட்சிகள் அடுத்த புகாரை எழுப்பியுள்ளன. குறிப்பாக, இதுகுறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.பி. லஹர் சிங் சிரேயோ, “கர்நாடக தொழில்துறை பகுதிகள் மேம்பாட்டு வாரியத்தால் ராகுல் தலைமையிலான அறக்கட்டளைக்கு அதிகார துஷ்பிரயேகத்தை பயன்படுத்தி நிலம் ஒதுக்கியதில் ஊழல் நடந்துள்ளது” என குற்றம்சாட்டினார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை கர்நாடக மாநில தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டீல் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர், ”கர்நாடக தொழில் மேம்பாட்டு வாரிய தொழிற்பேட்டையில் பல்வேறு நோக்கங்களுக்கு நிலம் ஒதுக்கப்படுகிறது. அதாவது மருத்துவமனை, பெட்ரோல் விற்பனை நிலையம், வங்கி, உணவகம், வீட்டுவசதி உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்கு அனுமதி அளிக்கிறோம். அந்த வகையில், மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் ராகுல் கார்கே, ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

இதனால்தான் ராகுல் கார்கேவுக்கும் நிலம் ஒதுக்கப்பட்டதே தவிர, சிறப்புச் சலுகை எதுவுமே வழங்கப்படவே இல்லை. சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே இந்த நிலம் ஒதுக்கப்பட்டது. முந்தைய பா.ஜனதா ஆட்சியில் சாணக்கியா பல்கலைக்கழகத்திற்கு 116 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதனால் அரசின் கருவூலத்திற்கு ரூ.137 கோடி இழப்பு ஏற்பட்டது. லஹர் சிங் எம்.பி. இதுகுறித்து பேச வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க; அசாம் | முகநூலில் இந்தியாவுக்கு எதிராக லைக்.. சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட வங்கதேச மாணவி!

மல்லிகார்ஜுன கார்கே
“முதல்வர் பதவியில் இருந்து என்னை யாராலும் நீக்க முடியாது” - கர்நாடக முதல்வர் சித்தராமையா நம்பிக்கை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com