தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக!

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான கூட்டணி, பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது பாரதிய ஜனதா.
பாஜக
பாஜகபுதிய தலைமுறை

உலகிற்கு ஜனநாயகத்தின் மாண்பை எடுத்துரைக்கும் இந்தியத் திருநாட்டின் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை தொடங்கியது.

மோடி
மோடி

பிற்பகல்வாக்கில் தெளிவான முன்னிலை நிலவரங்கள் தெரியவந்தது. அதன்படி பாரதிய ஜனதா கட்சி 230க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 290க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பாரதிய ஜனதா தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.

பாஜக
பெரும்பான்மை பெறாத அரசியல் கட்சிகள்: கூட்டணி அரசு அமைப்பதற்கான மரபுகள் என்ன? – ஓர் பார்வை

தென் மாநிலங்களைப் பொறுத்தவரையில் பாரதிய ஜனதா கட்சி கேரளாவில் முதல்முறையாக கால் பதித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா மட்டுமல்லாது தெலங்கானாவிலும் அக்கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கத்தில் அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பார்த்த இடங்களைப் பெறவில்லை.

குஜராத், இமாச்சல், டெல்லி ஆகியவற்றில் பாரதிய ஜனதா கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஆட்சி அமைப்பது குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பாஜக
தனிப்பெரும்பான்மை பெறாத பாஜக... மத்தியில் ஆட்சி அமைப்பதை காங்கிரஸால் தடுக்க முடியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com