தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
Published on

தாஜ்மஹால் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது குறித்து பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

"இந்துக்களை அழிக்க நினைத்த அரசர் கட்டிய தாஜ்மஹாலை இந்திய கலாச்சாரமாக ஏன் நினைக்க வேண்டும்?" என சங்கீத் சோம் கேள்வி எழுப்பினார். இதனால் ஏற்பட்ட சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், வரும் 26 ஆம் தேதி தாஜ்மஹாலை பார்வையிட யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.

நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தாஜ்மஹாலை, உத்தரப் பிரதேச அரசு சுற்றுலா பட்டியலில் இருந்து சமீபத்தில் நீக்கியது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்திற்கு களங்கம் விளைவிப்பது என்றும், அது துரோகிகளால் கட்டப்பட்டது என்றும் சங்கீத் சோம் தெரிவித்தார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம், தாஜ்மஹாலை கட்டிய ஷாஜகான் அவருடைய தந்தையையே சிறை வைத்தவர் என்றும், தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தின் மீது படிந்துள்ள கறை என்றும் தெரிவித்தார். அதேபோல், தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது எனவும், இஸ்லாமியர்களை நமது வரலாற்றில் இருந்தே அகற்ற வேண்டும் எனவும் சங்கீத் சோம் குறிப்பிட்டார். காதல் நினைவு சின்னமாக கருதப்பட்டு வரும் தாஜ்மஹாலை பற்றி பாஜக எம்.எல்.ஏ கூறியுள்ள இத்தகைய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com