பீகார் அமைச்சரவையில் அதிக இடங்களை கேட்கும் பாஜக?

பீகார் அமைச்சரவையில் அதிக இடங்களை கேட்கும் பாஜக?
பீகார் அமைச்சரவையில் அதிக இடங்களை கேட்கும் பாஜக?
Published on

பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பதால், அமைச்சரவையில் அதிக இடங்களை கேட்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. 


நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆளும் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதே நேரம் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை விட, பாஜக அதிக இடங்களை வென்றிருப்பதால், இம்முறை அமைச்சரவையில் மிகப் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என தெரியவந்துள்ளது.

கடந்த முறை நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். அதில் 19 பேர் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்தவர்கள். ஆனால், இந்த முறை இந்த எண்ணிக்கை அப்படியே தலைகீழாக மாறலாம் என தெரியவந்திருக்கிறது. 


இதில் அதிகபட்சமாக 36 அமைச்சர்கள் இடம் பெறக்கூடும் என்றும், அதிலும் பெரும்பாலான அமைச்சர்கள் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்றும் தெரியவந்துள்ளது. குறிப்பாக சபாநாயகர் பதவியை பாரதிய ஜனதா கோரலாம் என பீகார் மாநில அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும், இறுதி முடிவு எடுப்பது குறித்து பாஜகவின் மத்திய தலைமை, முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என கூறப்படுகிறது. கூட்டணி தர்மத்தின்படி அம்முடிவு அமையலாம் என்ற கருத்தும் பரவலாக காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com