இந்திய தேசத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் சேவை தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளர்.
ஏப்ரல் 6-ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாள். 37 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் 1980-ம் ஆண்டு பாஜக தொடங்கப்பட்டது. அட்டல் பிகாரி வாஜ்பாய் பாஜகவின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பாஜக வின் 37வது நிறுவன நாளைத் தொடர்ந்து கட்சி தொண்டர்களுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த மோடி, நாட்டிற்கும் ஏழை மக்களுக்கும் பாரதிய ஜனதா கட்சின் சேவை தொடரும் என தெரிவித்தார். கட்சியை வளர்க்க பாடுபடும் தொண்டர்களின் உழைப்பை பாராட்டிய பிரதமர் மோடி, நாட்டு மக்கள் பாஜகவின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்துக்குச் சென்ற மோடி, அங்கு நிறுவப்பட்டிருக்கும் பாஜகவின் முன்னோடித் தலைவரான தீன தயாள் உபாத்யாயாவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் பிற தலைவர்களும் உபாத்யாயா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.