ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர்.. 3 மாநிலங்களில் அபார வெற்றி.. உற்சாக கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியமைக்க இருப்பதால், அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பாஜக வெற்றி
பாஜக வெற்றிட்விட்டர்
Published on

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த மாதம் சட்டப்பேரவை நடைபெற்றது. இதில் மிசோரம் தவிர மற்ற 4 மாநிலங்களிலும், இன்று (டிச.3) காலை முதல் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மிசோரமில் மட்டும் நாளை (டிச.4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

அதன்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது நிலவரப்படி, பாஜக முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகர ராவ் கட்சியான பாரத் ராஷ்ட்ரிய சமிதியை வீழ்த்தி, காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்ட்விட்டர்

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பெரும்பான்மைக்கு 116 தொகுதிகள் தேவை. அந்த வகையில், தற்போது 4.30 மணி நிலவரப்படி, பாஜக 165 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 64 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பெரும்பான்மையை அடுத்து, அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதால் அம்மாநிலத்தில், மீண்டும் பாஜக ஆட்சி அமைய இருப்பது உறுதியாகி உள்ளது. அம்மாநிலத்தில் தற்போது சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: "சனாதன தர்மத்தை அவதூறாகப் பேசினால் இதுதான் விளைவு" - காங். தோல்வி குறித்து வெங்கடேஷ் பிரசாத் காட்டம்

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பெரும்பான்மைக்கு 100 தொகுதிகள் தேவை. அந்த வகையில், தற்போது 4.30 மணி நிலவரப்படி, பாஜக 117 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 67 இடங்களில் உள்ளது. பெரும்பான்மையை அடுத்து, அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதால், பாஜக ஆட்சியமைக்க இருக்கிறது. அம்மாநிலத்தில் தற்போது, அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது

ராஜஸ்தான்
ராஜஸ்தான்ட்விட்டர்

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில், ஆட்சியைப் பிடிக்க பெரும்பான்மைக்கு 46 தொகுதிகள் தேவை. அந்த வகையில், தற்போது 4.30 மணி நிலவரப்படி, பாஜக 54 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 36 இடங்களில் உள்ளது. பெரும்பான்மையை அடுத்து, அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதால், பாஜக ஆட்சியமைக்க இருக்கிறது. அம்மாநிலத்தில் தற்போது, பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது

இம்மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியமைக்க இருப்பதால், அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சி தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகர் ராவ் கட்சியை வீழ்த்தி, முதன்முறையாக ஆட்சியமைக்க இருக்கிறது. 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவிற்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பெரும்பான்மையாக 60 தொகுதிகள் தேவை. அந்த வகையில், தற்போது 4.30 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 63 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) 40 இடங்களில் உள்ளது. பெரும்பான்மையை அடுத்து, தெலங்கானாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால், அக்கட்சி முதன்முறையாக அங்கு ஆட்சியமைக்க இருக்கிறது. அம்மாநிலத்தில் தற்போது, சந்திர சேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: “மதுரை அலுவலகத்தில் சோதனை நடத்தியது சட்டவிரோதம்”.. தமிழக டிஜிபி அலுவலகத்தில் அமலாக்கத் துறை புகார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com