டெல்லி ஜமா மசூதி ஜமுனாதேவி கோயிலாக இருந்தது: பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு

டெல்லி ஜமா மசூதி ஜமுனாதேவி கோயிலாக இருந்தது: பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு
டெல்லி ஜமா மசூதி ஜமுனாதேவி கோயிலாக இருந்தது: பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு
Published on

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜமா மசூதி, முற்காலத்தில் ஜமுனாதேவி கோயிலாக இருந்தது என்று பாஜக எம்பி வினய் கட்டியார் கூறியுள்ளார்.

பாஜக எம்பி வினய் கட்டியார் தொடர்ந்து பல சர்ச்சை கருத்துக்களை பேசி வருகிறார். ஏஎன்ஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில் எம்பி வினய் டெல்லியில் உள்ள ஜமா மசூதி குறித்து சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார். செய்திக் குறிப்பில், முகலாயர்கள் படையெடுத்து வந்த போது சுமார் 6000 இந்து கோயில்களை இடித்துத் தள்ளினர். தாஜ்மஹால் இருந்த இடத்தில் தேஜோ மஹாலயா இருந்தது போல, முகலாயர்கள் டெல்லியை சூறையாடுவதற்கு முன்னர், தற்போது ஜமா மசூதி இருக்கும் இடத்தில் ஜமுனாதேவி கோயில் இருந்தது என்று கூறினார்.  

முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் சுற்றுலா கையேட்டிலிருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்ட போது, தாஜ்மஹால் இருந்த இடத்தில் சிவ ஆலயம் இருந்தது என்று கூறினார். 17 ஆம் நூற்றாண்டில் தாஜ்மஹால் மற்றும் டெல்லி செங்கோட்டையை கட்டிய முகலாய மன்னர் ஷாஜகான் தான் ஜமா மசூதியை கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com