மனைவியால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா ? பாஜக எம்.பியின் புது ஐடியா

மனைவியால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா ? பாஜக எம்.பியின் புது ஐடியா
மனைவியால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா ? பாஜக எம்.பியின் புது ஐடியா
Published on

மனைவியால் பாதிக்கப்படுவோரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா எம்பி ஹரிநாராயண் ராஜ்பர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண பல்வேறு அமைப்புகளை அரசு ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆனால் ஆண்களின் நலனுக்காக எந்த அமைப்பும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் ஹரிநாராயண் பேசினார். மனைவிகளால் கணவர்கள் கொடுமைப்படுத்தப்படுவது அதிகரித்து வருவதாகவும் பொய் புகார்கள் காரணமாக ஏராளமான கணவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக எம்பி தெரிவித்தார்.

எனவே திருமணமான ஆண்கள் நலனுக்கென புருஷ் ஆயோக் என்ற பெயரில் ஒரு அமைப்பை அரசு ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். ஹரிநாராயண் இந்த கோரிக்கையை முன்வைத்த போது அவையில் சிரிப்பலை எழுந்தது அப்போது அவையில் இருந்த 5 பெண் எம்பிக்களும் புன்னகைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com