’ஒரே நாடு ஒரே தேர்தல்’ to ’3 கோடி ’பெண்களை லட்சாதிபதிகளாக்க இலக்கு’-பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் , காங்கிர போன்ற கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை ஏற்கெனவே வெளியிட்டுள்ள சூழலில், இன்று பாஜகவும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை இன்று டெல்லி உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டுள்ளது.
பாஜகவின் தேர்தல் அறிக்கை
பாஜகவின் தேர்தல் அறிக்கை முகநூல்
Published on

பாராளுமன்ற மக்களவை தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைப்பெற உள்ள சூழலில் திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் , காங்கிர போன்ற கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை ஏற்கெனவே வெளியிட்டுவிட்டன. இந்நிலையில்,இன்று( 14.4.2024) பாஜகவும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று காலையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். இந்நிகழ்வில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங்,அமித்ஷா, நிர்மலா சீதாராமன், பாஜக தொண்டர் என பலர் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான 27 பேர் கொண்ட குழு இத்தேர்தல் அறிக்கையை உருவாக்கியுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையானது, மக்களின் அடிப்படை தேவைகளுக்கும், அதேப்போல மருத்துவ தேவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், பெண்கள், விவசாயிகள் , இளைஞர்கள், ஏழைகளை கவரும் வண்ணமும் அமைந்துள்ளது என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’சங்கல்ப் பத்திரம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், அவர்களின் அங்கீகாரத்திற்காகவும் தன் வாழ்க்கை அர்ப்பணித்த சட்டமாமேதை அம்பேத்கர் பிறந்த நாளான இன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் தேர்தல் அறிக்கை
"நாளை முதல் என் மகனுக்காக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப் போகிறேன்" - பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி!

இதில் உறையாற்றிய பிரதமர் மோடி,” அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டதில் மகிழ்ச்சி. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டுகள் கொண்டாடப்படும் நல்ல நாளில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ” என்று உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படும்.

  • பொது வாக்காளர் பட்டியல் உருவாக்கப்படும்.

  • 5 ஆண்டுகளுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

  • 2025 ஆம் ஆண்டு பழங்குடியினர் பெருமை ஆண்டாக கடைப்பிடிக்கப்படும்.

  • பெண்கள், விவசாயிகள் , இளைஞர்கள், ஏழைகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்.

  • 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு ரூ.5 லட்சம் மருத்துவக்காப்பீடு வழங்கப்படும்.

  • ஏழை மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பது உறுதிச் செய்யப்படும்.

  • 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீட்பு.

  • வேலைவாய்ப்பு, முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

  • முத்ரா கடன் திட்டம் - ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்.

  • பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

  • சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டம் நீட்டிக்கப்படும்.

  • 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • திருநங்கைகளுக்கு மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம் வழங்கப்படும்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை
அம்பேத்கர் யாருக்கான ஆயுதம்?
  • கிராமங்களில் பைப் லைன் மூலமாக சிலிண்டர் விநியோகம் .

  • பெண்களின் சுகாதரத்தை உறுதி செய்ய ரூ.1 க்கு சானிட்டர் நாப்கின் வழங்கப்படும்.

  • கருப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

  • இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும்.

  • மக்கள் மருந்தகத்தில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும்.

  • அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com