உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு பிப்ரவரி மாதம் 4–ம் தேதி தொடங்கி, கடந்த 8–ந் தேதி வரை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.
இந்த மாநிலங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியதில் இருந்தே பாஜக முன்னிலை வகிக்கத் தொடங்கியது. அதே போல பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.