பாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது

பாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது
பாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது
Published on

சட்டக் கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரை அடுத்து, மத்திய முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா இன்று கைது செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், மத்திய முன்னாள் இணை அமைச்சரும் பாஜக தலைவருமான சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து, வீடியோ வெளியிட்டிருந்தார். அதை வெளியிட்ட பின் மாயமான அந்த மாணவி, பின்னர் ராஜஸ்தானில் இருந்து மீட்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சின்மயானந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

மாணவியின் புகார் பற்றி சிறப்பு விசாரணைக்குழு சின்மயானந்தாவிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது.  இந் நிலையில், ஒரு வருடத்திற்கு மேலாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் சட்ட மாணவி அதிர்ச்சி தகவ லை தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மாணவியின் தந்தை 43 வீடியோக்களை விசாரணை நடத்திவரும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஆதாரமாக வழங்கினார். 

புகார் அளித்த மாணவியின் தோழி கூறிய போது, “அவள் என்னுடன் தான் சட்டக்கல்லூரியில் படித்து வந்தார். சின்மயானந் தாவால் அவள் சந்தித்து வரும் பிரச்னைகளை என்னிடம் கூறினாள். தொடக்கத்தில் இலவசமாக உணவு மற்றும் சில உரி மைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், ஸ்டோரில் என்ன நடக்கிறது என்பது அவள் அறிந்திருக்கவில்லை. பின்னர்தான், தான் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டுவதாக கூறினார்” என்றார்.

இந்நிலையில், இந்த வழக்கில் சின்மயானந்தா இன்று கைது செய்யப்பட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com