அருண் ஜெட்லிக்கு செக் வைக்கும் சுவாமி

அருண் ஜெட்லிக்கு செக் வைக்கும் சுவாமி

அருண் ஜெட்லிக்கு செக் வைக்கும் சுவாமி
Published on

லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியே வந்த விஜய் மல்லையா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது “வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவே விரும்புகிறேன், ஆனால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கவே விரும்புகின்றனர்; இந்தியாவை விட்டு வெளியேறும் முன்பு மத்திய நிதியமைச்சரை பார்த்து பேசி, நிலைமையை சரி செய்ய முயற்சித்தேன்” என்று கூறினார்

விஜய் மல்லையாவின் பேட்டி வந்த உடனேயே அருண் ஜெட்லியின் விளக்கம் வந்தது. மல்லையாவை நான் பார்க்கவில்லை, அதில் உண்மையில்லை என்று ஒரு பக்க அறிக்கை கொடுத்தார் ஜெட்லி. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மல்லையா ஒருநாள் நாடாளுமன்றத்தில் உள்ள எனது அலுவலகத்துக்கு செல்லும் போது என்னை மறித்து ‘கடன் குறித்த விஷயங்களை பேச முயன்றார், நானோ இதெல்லாம் வங்கிகளிடம் தெரிவியுங்கள்” எனக் கூறினேன். ஆனால் மல்லையா எந்த வித முயற்சியும் செய்யாமல் தப்பிச் சென்று விட்டார் என ஜெட்லி கூறினார். 

ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் சுப்ரமணிய சுவாமி “விஜய் மல்லையாவுக்கு எதிராக 2015-ல் கொடுக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை நீர்த்துப் போகும் அளவுக்கு மாற்ற, நிதியமைச்சகத்தில் ஒருவர் உத்தரவிட்டிருக்கிறார் , அவர் யார் ? என கேள்வி எழுப்பினார். பின்னர் இன்று காலை “ விகய் மல்லையா விவகாரத்தில் இரண்டு விஷயங்களை மறுக்க முடியாது ; ஒன்று மல்லையாவுக்கு கொடுக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் சிலரது உத்தரவால் நீர்த்துப் போக செய்யப்பட்டுள்ளது , மற்றொன்று நிதியமைச்சரை சந்தித்து , வெளிநாடு செல்வதை தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார் மல்லையா” என கூறியுள்ளார். 

சுவாமியின் இந்த கருத்து குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் “சுதந்திரமாக பேசக் கூடிய தலைவர் சுவாமி, அவர் பேசுவதற்கான சுதந்திரத்தை பாஜக கொடுத்துள்ளது” என்றார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com