ஜம்மு காஷ்மீர் தேர்தல்: வாக்குகளில் நம்பர் ஒன் பெற்ற பாஜக... ஆனாலும் சட்டசபையில் சறுக்கியது ஏன்?

வாக்கு சதவிகிதத்தில் முதலிடம் என்றாலும், பாஜகவுக்கு ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் இரண்டாவது இடமே கிடைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்முகநூல்
Published on

வாக்கு சதவீதத்தில் முதலிடம்.. சட்டமன்றத்தில் இரண்டாமிடம்

தேசிய மகாநாடு கட்சி ஜம்மு காஷ்மீரில் 42 இடங்களை கைப்பற்றி, உமர் அப்துல்லா மீண்டும் முதல்வராக பதவியேற்கும் சூழல் உருவாகி உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது பாரதிய ஜனதா கட்சியே. ஜம்மு பிராந்தியத்தில் தனது செல்வாக்கை வலுப்படுத்தியுள்ள பாஜக, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் 25.6% வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

ஆனால், அந்தக் கட்சிக்கு ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் கிட்டியுள்ள 29 இடங்கள் தேசிய மகாநாடு கட்சியை விட 13% குறைவு. பதிவான மொத்த வாக்குகளில் 23.4% பெற்றுள்ள தேசிய மகாநாடு கட்சி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி வென்றுள்ள ஆறு இடங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்றுள்ள ஒரு இடம் ஆகியவற்றை சேர்த்து தேசிய மகாநாடு கூட்டணிக்கு, ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை 49 இடங்களுடன் கிட்டியுள்ளது.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்முகநூல்

அதிக வாக்கு சதவிகிதம் இருந்தும் பாஜக ஆட்சியமைக்காதது ஏன்?

வாக்கு சதவிகிதத்தில் முதலிடம் என்றாலும், பாஜகவுக்கு ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் இரண்டாவது இடமே கிடைத்துள்ளது. இதற்கு பிரதான காரணம் பாஜக வெற்றி பெற்றுள்ள 29 தொகுதிகளும் ஜம்மு பிராந்தியத்தில் உள்ளன என்பதும் ஜம்மு பிராந்தியத்தில் காஷ்மீரை விட அதிகமாக வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது என்பதுமே. இலங்கை அதிபர் தேர்தல் போன்ற போட்டியாக இருந்தால், பாஜக அதிக வாக்குகளை பெற்ற காரணத்தால் ஜம்மு காஷ்மீரில் வெற்றி கொடியை நாட்டி இருக்கும் என்கிற உதாரணம் வாக்கு சதவீதங்களின் தாக்கத்தை காட்டுவதாக உள்ளது.

ஜம்மு காஷ்மீர்
கண்ணிவெடி புதைப்பு.. கூடுதல் ராணுவம்! தென்கொரிய எல்லை நிரந்தர துண்டிப்பு.. வேகம் காட்டும் வடகொரியா!

காஷ்மீரில் தேசிய மகாநாடு கட்சி ஆதிக்கம்

தேசிய மகாநாடு வெற்றி பெற்றுள்ள 42 தொகுதிகளில் 35 காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ளன. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தேசிய மகாநாடு ஜம்மு ஏழு தொகுதிகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் குறைந்த அளவு வாக்குப்பதிவான தொகுதிகள் ஸ்ரீநகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள காஷ்மீர் பிராந்திய தொகுதிகளே.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்முகநூல்

அதே சமயத்தில் அதிக வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகள் உதம்பூர், சம்பா மற்றும் கத்துவா ஜம்மு பிராந்தியத்தில் உள்ள மாவட்டங்களில் அமைந்துள்ளன. ஜம்மு பிராந்தியத்தில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் சராசரி வாக்குப்பதிவு 72.91%, சாம்பா மாவட்டத்தில் 72.41% மற்றும் கத்துவா மாவட்டத்தில் 70.53% என்பது தேர்தல் ஆணையத் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் பாரதிய ஜனதா கட்சி தனது செல்வாக்கை வலுப்படுத்தி 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட காஷ்மீர் பிராந்தியத்தை சேர்ந்தவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

10 வருடங்களுக்கு முன் 2014 ஆம் வருடத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றபோது பாரதிய ஜனதா கட்சி ஜம்மு காஷ்மீரில் 23% வாக்குகளை பெற்றது. இந்த வருட தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் 2.6 சதவிகித புள்ளிகள் அதிகரித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர்
ஷேக் ஹசீனா எங்கே? இணையத்தில் தேடல் அதிகரிப்பு.. வங்கதேச இடைக்கால அரசு சொல்வது என்ன?

காங்கிரஸ் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவு!

அதே சமயத்தில் தேசிய மகாநாடு கட்சியின் தனது வாக்கு சதவிகிதத்தை 2.6 சதவிகிதம் புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்த வருட சட்டமன்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 23.4% தேசிய மகாநாடு கட்சிக்கு கட்டி உள்ளது. அதே சமயத்தில் காங்கிரஸ் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றின் வாக்கு சதவிகிதம் இந்த வருட தேர்தலில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் இந்த முறை ஏழு சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பதும் இது மூன்றாவது இடத்தில் உள்ள மக்கள் ஜனநாயக கட்சி வென்ற மூன்று தொகுதிகளை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புது கணக்கை தொடங்கிய ஆம் ஆத்மி கட்சி!

மெஹ்ராஜ் மாலிக்
மெஹ்ராஜ் மாலிக்

இந்த வருட ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் இன்னொரு முக்கிய முடிவு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் முதன்முறையாக ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதே. ஆம் ஆத்மி கட்சியின் மெஹ்ராஜ் மலிக் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள டோடா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதை அந்தக் கட்சி கொண்டாடி வருகிறது. ஹரியானா சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், எதிர்பாராத விதமாக ஆம் ஆத்மி கட்சி ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது ஒரு புதிய தொடக்கம் என அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கருதுகின்றனர்.

ஜம்மு காஷ்மீர்
டெல்லி CM அதிஷி வீட்டுக்கு சீல்.. குற்றஞ்சாட்டும் CM அலுவலகம்.. கேள்வியெழுப்பிய பாஜக.. காரணம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com