கடந்த 10 ஆண்டுகளில் விளம்பரங்களுக்காக மத்திய அரசு 3 ஆயிரத்து 602 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
2014 ஜூன் முதல் 2024ஆம் ஆண்டு மார்ச் வரை, தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ், இணையதளங்களுக்கு மத்திய அரசு விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை குறித்து அஜய் பசுதேவ் போஸ் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டுள்ளார். அதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அளித்துள்ள பதிலில், " விளம்பரத்திற்காக மட்டும் 3 ஆயிரத்து 602 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் விளம்பரத்திற்காக அச்சு ஊடகத்திற்கு 2 ஆயிரத்து 973 கோடி ரூபாயும், தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்களுக்கு 628 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.
2014-15ல் அச்சு ஊடகத்திற்கு 380 கோடியே 43 லட்சமும், டிஜிட்டல் ஊடகங்களுக்கு 93 கோடியே 15 லட்சமும் என மொத்தமாக 473 கோடியே 58 லட்சம் ரூபாய் விளம்பரத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.
2015-16ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 541 கோடியே 36 லட்சமும், 2016-17ல் 613 கோடியே 68 லட்சமும், 2017-18ல் 473 கோடியே 19 லட்சமும், 2018-19ல் 507 கோடியே 37 லட்சமும் விளம்பரத்திற்காக மத்திய அரசு செலவு செய்துள்ளது.
இதேபோல் 2020-21ல் 167 கோடியே 82 லட்சம் ரூபாயும், 2021-22ல் 102 கோடியே 72லட்சம் ரூபாயும், 2022-23ல் ரூ155 கோடியே 29 லட்சம் ரூபாயும் மத்திய அரசு செலவு செய்துள்ளது.
2023-24ல் அச்சு விளம்பரத்திற்காக 250 கோடியே 69 லட்சம் ரூபாய்யை மத்திய அரசு செலவு செய்துள்ள.” என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.