தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித் ஷா

தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித் ஷா
தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித் ஷா
Published on

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக அமித் ஷா அதனை இறக்கியதால் சலசலப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் 72-ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றினார். அதேபோல சென்னை கோட்டையில் முதலமைச்சர் பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றார். இதேபோல அந்தந்த மாநிலங்களில் அந்ததந்த முதலமைச்சர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களிலும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனிடையே டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கொடியேற்றினார். ஆனால் முதலில், தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக தெரியாமல் அதனை இறக்கிவிட்டார். அப்போது தேசியக் கொடி தரையை வந்து தொட்டது. இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சுதாரித்துக் கொண்ட அமித் ஷா தேசியக் கொடியை மீண்டும் ஏற்றிவைத்தார்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தேசியக் கொடியை ஏற்றாமல் இறக்கிய அமித் ஷாவின் செயலை பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com