4 மாநிலங்களில் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், டெல்லி ஆகிய நான்கு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்த கட்சித் தலைவர் அமித் ஷா, அவர்களிடம் தேர்தலில் வெற்றி பெற வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விவாதித்தார்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நரேந்திர சிங் டோமர் ஆகியோர் முறையே டெல்லி மற்றும் ஹரியானா மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் பொறுப்பாளராக பூபேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக ஓம் மாத்தூர் அறிவிக்கப்பட்டுள்ளார்.