’மோடி அலை இல்லை’.. பாஜக வேட்பாளரின் பேச்சை வரவேற்ற எதிர்க்கட்சிகள்.. பதிலளித்த கருணாஸ் பட நடிகை!

"மோடி அலை இருப்பதாக மாயையில் இருக்க வேண்டாம்" என அமராவதி தொகுதி பாஜக வேட்பாளர் நவ்நீத் ராணா பேசியதைத் தொடர்ந்து, அது பேசுபொருளானது. அதற்குத் தற்போது பதில் அளித்துள்ளார்.
நவ்நீத் கவுர் ராணா
நவ்நீத் கவுர் ராணாட்விட்டர்
Published on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் 18வது மக்களவைத் தேர்தல் திருவிழாவில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. இதற்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. அதேநேரத்தில் இதர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்தல் பணிகள் சூடுபிடித்து வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

அந்த வகையில், கடந்த தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தனி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாஸ் பட நடிகை நவ்நீத், சமீபத்தில் பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அதே தொகுதியில் நவ்நீத்துக்கு அக்கட்சியின் சார்பில் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அத்தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவரும் நவ்நீத், கடந்த 15ஆம் தேதி அமராவதியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டார். இதில் பேசிய அவர், ”மக்களவைத் தேர்தலை ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தல்போல் நாம் எதிர்கொள்ள வேண்டும். மோடி அலை இருப்பதாக மாயையில் இருக்க வேண்டாம். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், ஆளுங்கட்சி தீவிரமாக இயங்கியபோதும் நான் சுயேட்சை வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்" எனப் பேசியிருந்தார்.

இதையும் படிக்க: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பொருளாதார தடை; அமெரிக்காவின் அறிவிப்பும் தற்போதைய நிலையும்!

நவ்நீத் கவுர் ராணா
சாதிச் சான்றிதழ் வழக்கு: கருணாஸ் பட நடிகைக்கு சாதகமாக அமைந்த தீர்ப்பு.. உற்சாகத்தில் பாஜக வேட்பாளர்!

இதுகுறித்து சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள், ”நவ்நீத் ராணா உண்மையைப் பேசுகிறார் என்றும், அவரது கருத்தை வரவேற்கிறோம்” எனவும் கருத்து தெரிவித்திருந்தன.

இதுகுறித்து பதிலளித்த என்சிபி (எஸ்பி) தலைமை செய்தித் தொடர்பாளர் மகேஷ் தபசே, “நவ்நீத் என்ன பேசியிருந்தாலும் அது உண்மைதான். அது அவருக்கும் தெரியும், பாஜக எம்பிக்களுக்கும் தெரியும். மோடி அலை இல்லை என்பது பாஜகவுக்கே தெரியும். இதனால், பாஜக அணிகளில் பீதி ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களவைத் தேர்தலில் கிராமப் பஞ்சாயத்துத் தேர்தலைப்போல போராட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து நவ்நீத் ராணாவின் பேச்சு, மகாராஷ்டிராவில் பேசுபொருளானது. இந்த நிலையில் தனது பேச்சு குறித்து நவ்நீத் ராணா பதிலளித்துள்ளார். அவர், “எதிர்க்கட்சிகள் தனது பேச்சைத் திரித்துக்கூறி வருகின்றன. நாட்டில் எப்போதும் மோடி அலை இருந்தது. தற்போதும் மோடி அலை உள்ளது. இனிமேலும் இருக்கும். நாட்டின் முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி தேவை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ’சமூக நீதியைக் காப்பாற்றும் INDIA கூட்டணி’.. ஆதரவு தெரிவித்த ‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேல்!

நவ்நீத் கவுர் ராணா
பாஜகவில் இணைந்த கருணாஸ் படநடிகை: அமராவதியில் மீண்டும் போட்டி..வலுக்கும்எதிர்ப்பு! நவ்நீத் ராணா யார்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com