வரவு, செலவு கணக்கு: பாஜக, காங்கிரஸ் மீது புகார்

வரவு, செலவு கணக்கு: பாஜக, காங்கிரஸ் மீது புகார்
வரவு, செலவு கணக்கு: பாஜக, காங்கிரஸ் மீது புகார்
Published on

கடந்த 3 ஆண்டுகளாக பாரதிய ஜனதாவும், காங்கிரஸ் கட்சியும் வருவாய் செலவு விவரங்களை தாக்கல் செய்வதில் தாமதம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

ஜனநாயக சீரமைப்பு கூட்டமைப்பு என்ற அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், பாரதிய ஜனதாவும், காங்கிரசும் 2014-15, 2015-16 ஆண்டுகளுக்கான வருவாய் விவரக் கணக்குகளை மிகவும் தாமதமாக தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல், 2016-17ம் ஆண்டுக்கான விவரங்களையும், கெடு முடிந்து 100 நாட்களாக ஒப்படைக்கவில்லை என்று கூறியுள்ளது. 

2016-17ம் ஆண்டில் தேசிய கட்சிகளில் பாரதிய ஜனதாவிற்கே அதிகபட்சமாக 571 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு அதே ஆண்டில் 261 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 
2016-17ம் ஆண்டிற்கான வருவாய் விவரங்களை, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் உரிய நேரத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தாமதமாக தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com