பீகார் மாநிலம் முசாப்பூர் நகரில் உள்ள சிறுமிகள் தங்கும் விடுதி பாலியல் தொழில் செய்யும் இடமாக செயல்பட்டு வந்ததாக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமிகள் கருவுற்றால், அதனை கலைப்பதற்கு விடுதியில் தனி அறையும் செயல்பட்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணை தீவிரம் எடுக்க பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்து கொண்டு இருக்கிறது.
மும்பையை சேர்ந்த டாட்டா சமூக அறிவியல் நிறுவனம் பீகாரில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் தணிக்கை மேற்கொண்டது. அப்போது முசாபர்பூரில் இயக்கும் அரசு உதவி பெறும் காப்பகத்தில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு ள்ளதாக அறிக்கை சமர் பித்தது. இது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தக் காப்பகத்தில் இருந்த 42 சிறுமிகளும் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். முதலில் 29 சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர்கள் அனைவரும் மாத கணக்காகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அறிக்கை கூறியது.
இந்நிலையில் மேலும் 5 சிறுமிகளின் மருத்துவ அறிக்கை இன்று வெளியானது. அதில் அவர்களும் மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இதையடுத்து 39 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அனைத்து மாணவிகளுமே பாலியல் வன்கொடுக்கு ஆளாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பீகார் விடுதியில் இருப்பவர்களாலும் அங்கு வருகை தந்தவர்களாலும் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளில் சிலருக்கு கரு உருவாகியுள்ளது. இதையறிந்த நிர்வாகம் பல சிறுமிகளுக்கு கருக்கலைப்பும் செய்துள்ளது. இந்தச் சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பமாக, ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக, சிறுமிகள் போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் அரசு விடுதியின் வளாகத்தில் தோண்டினர். எலும்புக் கூடுகள் ஏதும் சிக்கவில்லை. இந்த விவகாரத்தில் அந்த விடுதியை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் ஒருவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பீகார் மாநில அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கீதா சைனி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார் அதில் "சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கருவுற்றதும், அதனை கலைக்க தனி அறையும் விடுதியில் இருந்து இருக்கிறது. சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த 62 வகையான போதை மருந்துகள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது" என அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். இப்போது இந்த விடுதி குறித்த வழக்கை 12 பேர் கொண்ட சிபிஐ குழு விசாரணை நடத்தி வருகிறது.