பாஜகவை சேர்ந்த பீகாரின் முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், பீகாரின் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எல்.ஜே.பி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவுக்குப் பின்னர் அந்த மாநிலங்களவை உறுப்பினர் இடம் காலியாக இருந்ததால் கடந்த மாதம் இடைத்தேர்தல் வேட்பாளராக அவர் பரிந்துரைக்கப்பட்டார். இந்த தேர்தல் டிசம்பர் 14 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அவர் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த முறை பீகார் பாஜக-ஐக்கிய ஜனதாதள ஆட்சியில் சுஷில்குமார் மோடி துணைமுதல்வராக பதவி வகித்தார். ஆனால் இந்த முறை அவருக்கு இப்பொறுப்பு வழங்கப்படவில்லை, இந்த சூழலில் அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.