“என் தந்தையை கொன்றுவிட்டார்கள்” - மோப்பநாய் துரத்தியதில் ஆற்றில் விழுந்து மாயமான நபர்

“என் தந்தையை கொன்றுவிட்டார்கள்” - மோப்பநாய் துரத்தியதில் ஆற்றில் விழுந்து மாயமான நபர்
“என் தந்தையை கொன்றுவிட்டார்கள்” - மோப்பநாய் துரத்தியதில் ஆற்றில் விழுந்து மாயமான நபர்
Published on

பீகாரில் மோப்ப நாய்கள் துரத்தியதால் ஓடிச்சென்ற நபர் ஒருவர் ஆற்றில் குதித்து மாயமானார்.

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர். நாய்களிடமிருந்து தப்பிக்க கந்தக் ஆற்றில் குதித்தத நிலையில் மாயமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஈஸ்வரின் மகன் குட்டு குமார் கூறுகையில், ''எனது தந்தை, விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, மதுபான சோதனை நடத்துவதற்காக காவல்துறை அல்லது கலால் துறை குழு அப்பகுதிக்கு வந்தடைந்தது. அப்போது அதிகாரிகள் நாய்களுடன் வந்திருந்தனர்.

என் தந்தையை கண்ட மோப்ப நாய்கள் அவரை துரத்த தொடங்கின. அவரும் ஓடிச்சென்றார். கந்தக் ஆற்றை நோக்கிச்சென்றவர், நாய்களிடமிருந்து தப்பிக்க வேறு வழி தெரியாமல் ஆற்றில் குதித்துவிட்டார். இதையடுத்து அவரைக்காணவில்லை. காவல்துறையினர் என் தந்தையை கொன்றுவிட்டனர்'' என்று தெரிவித்துள்ளார். கந்தக் ஆற்றைச் சுற்றி ஏராளமான கிராம மக்கள் திரண்டிருந்தனர். ஈஸ்வரை தேடியபோது அவர் ஆற்றில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மாநில பேரிடர் படை ஆற்றில் தேடியபோதும் ஈஸ்வரை கண்டறியமுடியவில்லை.

"மாவட்டத்தில் எங்களிடம் மோப்ப நாய்கள் இல்லை. எனவே, மோப்ப நாய்கள் மூலம் போலீஸ் நடவடிக்கை எடுக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட வழக்கை விசாரிக்க மோப்ப நாய் தேவைப்படும்போது, நாயை ஏற்பாடு செய்ய மாநில தலைமையகத்தில் சிறப்பு அனுமதி பெறவேண்டும்," என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமிதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com