பீகார் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் மழையால் பாதிக்கப்பட்ட அசாமில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
கடந்த 2 வாரங்களில் பெய்த கடும் மழையால், பீகார் மற்றும் அசாம் மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இரு மாநிலங்களிலும் உள்ள 13 நகரங்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து கொண்டிருக்கின்றன. வெள்ளம் பாதித்த இடங்களில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் பீகாரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 130 ஆக இருக்கிறது. பீகாரில் அடுத்த 24 மணி நேரங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசாமை பொறுத்தமட்டில் 864 கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 417 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான இடங்களில் மழை நீர் வடிந்து வருகிறது.