பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி: முழு விவரம்.!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி: முழு விவரம்.!
பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி: முழு விவரம்.!
Published on

பீகார் தேர்தலில் இறுதியாக பாஜக கூட்டணி 125 இடங்களையும், ராஷ்டிரிய ஜனதாதள கூட்டணி 110 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 110 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 74 இடங்களிலும், 115 தொகுதிகளில் போட்டியிட்ட நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றது. விகாஸ் ஷீல் இன்சான் கட்சி, இந்துஸ்தானி ஆவம் மோர்ச்சா கட்சிகள் தலா 4 இடங்களைக் கைப்பற்றின. ஆட்சியமைக்க 122 இடங்களே தேவை என்ற நிலையில், 125 இடங்களுடன் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது.

எதிர்த்தரப்பான மகா கூட்டணியில் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்டிரிய ஜனதா தளம், மாநிலத்திலேயே தனிப்பெரும் கட்சியாக 75 இடங்களை வசப்படுத்தியுள்ளது. 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, போட்டியிட்ட 19 தொகுதிகளில் 12 இடங்களை வசப்படுத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சிகள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

ஒவேசியின் AIMIM கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த தொகுதிகள் தவிர பிற இடங்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ஒவேசியின் கட்சி பெற்ற வாக்குகள் ஒரு காரணமாக கூறப்படுகிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்

மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி, ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் வாக்குகளை பிரித்ததில் இக்கட்சிக்கு முக்கிய பங்கிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com