சிறுமிகள் தங்கும் விடுதியில் சோதனை ! அதிர்ச்சியில் உறைந்த போலீஸார்

சிறுமிகள் தங்கும் விடுதியில் சோதனை ! அதிர்ச்சியில் உறைந்த போலீஸார்
சிறுமிகள் தங்கும் விடுதியில் சோதனை ! அதிர்ச்சியில் உறைந்த போலீஸார்
Published on

பீகார் மாநிலம் முசாபர்பூரில் அரசின் நிதியுதவியில் இயங்கும் தங்கும் விடுதி ஒன்றில் 44 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அந்த விடுதியில் தங்கியிருந்த 44 சிறுமிகளில் 29 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிந்தது. 

இதனையடுத்து விடுதியில் மீதம் இருக்கும் சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது மொத்தம் 29 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், பல சிறுமிகளை கருக்கலைப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பீகார் விடுதியில் இருப்பவர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளில் சிலருக்கு கரு உருவாகியுள்ளது. இதனையறிந்த விடுதி நிர்வாகம் பல சிறுமிகளுக்கு கருக்கலைப்பும் செய்துள்ளது. 

இவ்விவகாரத்தில் மீதமுள்ள சிறுமிகள் குறித்தும் மருத்துவ பரிசோதனை அறிக்கை வரவுள்ளது. இதனால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறுமிகளின் பட்டியல் அதிகரிக்கும் என போலீஸார் தெரிவிக்கின்றனர். மேலும் முசாபர்பூரில் உள்ள இல்லத்தில் ஏற்கெனவே இருந்தவர்களின் விவரமும் கேட்டக்கப்பட்டுள்ளதாக இவ்வழக்கை விசாரணை செய்யும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பபமாக, ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு வளாகத்தில் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ளதாக, சிறுமிகள் போலீஸாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். 

இதைத் தொடர்ந்து போலீசார் அரசு விடுதியின் வளாகத்தில் தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தப் பணிகள் எக்ஸிக்யூடிவ் மேஜிஸ்ட்ரேட் ப்ரியா ராணி குப்தா மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளின் முன்னிலையில் இந்தப் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த விவகாரத்தில் அந்த விடுதியை சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் விடுதியின் உள்ளே போலீஸார் நேற்று சோதனை மேற்கொள்ள தொடங்கினர். அதில் ஒரு பூட்டிய அறைக்குச் சென்ற போலீஸார் அங்கிருந்தவற்றைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த அறையில் ஏராளமான எலும்புக் கூடுகள் இருந்துள்ளது. அனைத்தும் மனித எலும்புக் கூடுகள்தான் என உறுதி செய்த போலீஸார். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விடுதியில் இருந்து இதுவரை எத்தனை சிறுமிகள் வெளியேறி உள்ளனர், உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com