டெல்லியில் ஆம் ஆத்மி தோல்வி; எம்எல்ஏ ராஜினாமா

டெல்லியில் ஆம் ஆத்மி தோல்வி; எம்எல்ஏ ராஜினாமா
டெல்லியில் ஆம் ஆத்மி தோல்வி; எம்எல்ஏ ராஜினாமா
Published on

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 160 ‌இடங்களுக்கும் மேலாக முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக பாஜக-வின் வெற்றி உறுதியாகி விட்டதால், தோல்விக்கு பொறுப்பேற்று ஆம் ஆத்மி எம்எல்ஏ அல்கா லம்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முனிசிபல் கார்ப்பரேஷன் ஆப் டெல்லி(எம்.சி.டி) எனப்படும் டெல்லி மாநகராட்சி தேர்தல் கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 270 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 53.58% வாக்குகள் பதிவானது. அதாவது மொத்தம் 71.39 லட்சம் வாக்குகள் பதிவானது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியிலும் மேலோங்கி இருந்தது.

மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவுதான். பாஜக-வின் கை மேலாங்கி இருந்தது. இதுவரை மொத்தமாக 160 இடங்களுக்கும் மேலாக பாஜக முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.

தேர்தலில் பின்னடைவை சந்திக்க வாக்குப்பதிவு இயந்திரங்களில் செய்யப்பட்ட முறைகேடே காரணம் என ஆம் ஆத்மி கூறியுள்ளது. மற்ற மாநிலங்களை போல டெல்லி தேர்தலிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். தோல்விக்கு பொறுப்பேற்று ஆம் ஆத்மி எம்எல்ஏ அல்கா லம்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மூன்றாவது இடத்திற்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. தோல்விக்கு பொறுப்பேற்ற காங்கிரஸ் கட்சியின் டெல்லி பொறுப்பாளர் பிசி சாக்கோ தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கும் அனுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com