விவசாய வருமானத்திற்கும் வரி: நிதி ஆயோக் உறுப்பினர் யோசனை

விவசாய வருமானத்திற்கும் வரி: நிதி ஆயோக் உறுப்பினர் யோசனை
விவசாய வருமானத்திற்கும் வரி: நிதி ஆயோக் உறுப்பினர் யோசனை
Published on

விவசாயம் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் வருமான வரி விதிக்கப்பட வேண்டும் என நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் விவேக் தேப்ராய் கருத்துக் கூறியுள்ளார்.

வருமான வரி வரம்புக்குள் வருவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான கூட்டத்தில் பேசிய அவர், ’வருமான வரி விதிப்பில் கிராமம், நகரம் என்றும் விவசாயிகள் மற்றவர்கள் என்றெல்லாம் பாகுபாடு பார்க்கக்கூடாது. விவசாயம் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் வருமான வரி விதிக்கப்பட வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த பட்ஜெட் உரையில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ’விவசாய வருமானத்தின் மீது வரி விதிக்கும் திட்டம் இல்லை’ என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com