பல்கலைக் கழகங்களின் மதப்பெயர்களை அரசு மாற்றாது: பாஜக உறுதி

பல்கலைக் கழகங்களின் மதப்பெயர்களை அரசு மாற்றாது: பாஜக உறுதி
பல்கலைக் கழகங்களின் மதப்பெயர்களை அரசு மாற்றாது: பாஜக உறுதி
Published on

பனராஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழங்களில் உள்ள மதப் பெயர்களை மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களின் நிதி நிர்வாகத்தை கண்காணித்து தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பாக பரிந்துரை செய்ய பல்கலைக்கழக மானியக் குழு செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்கலைக்கழக கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பு வழங்குதல், அரசு பல்கலைக்கழங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.

இந்தநிலையில், பனராஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் என பல்கலைக்கழங்களில் உள்ள மதப்பெயர்களை நீக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பான அதன் அறிக்கையில், “மத்திய அரசின் நிதியுடன் இயங்கும் பல்கலைக்கழங்கள் மதச்சார்பு அற்றவை ஆகும். ஆனால், பனராஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களிலுடன் தொடர்புடையை மதப் பெயர்கள் மதச்சார்பின்மை என்ற கருத்துக்கு மாறாக உள்ளது. இவற்றில் உள்ள மதப் பெயர்களை நீக்கிவிட்டு, அலிகார் பல்கலைக்கழகம், பனாரஸ் பல்கலைக்கழகம் என அழைக்கலாம். அல்லது, இவற்றை உருவாக்கியவர்களின் பெயர்களை இந்த பல்கலைக்கழங்களுக்கு சூட்டலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பல்கலைக் கழகங்களின் மதப்பெயர்களை மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக தலைவர் ஜாபர் இஸ்லாம் கூறுகையில், “இதுவெறும் பரிந்துரை தான். பல்கலைக் கழகங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்பதை மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். அதனால், இதில் விவாதத்திற்கு இடமேயில்லை” என்றார். அதேபோல், நாட்டில் எந்தவொரு மதமும் மதச்சார்பின்மைக்கு எதிரானது அல்ல என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com