அத்வானி ஓரங்கட்டப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலா! பாரத ரத்னா விருது அறிவிப்பின் பின்னணி என்ன?

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே .அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எல்.கே.அத்வானி - பிரதமர் மோடி
எல்.கே.அத்வானி - பிரதமர் மோடிPT WEB
Published on

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயர்ந்த சிவிலியன் விருது ’பாரத ரத்னா’ மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவை உருவாக்கி ஆட்சி கட்டிலில் வைத்தவர்களில் முக்கியமானவரான எல்.கே.அத்வானிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். அதில், “ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் அவரிடம் பேசி, இந்த கவுரவம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன்.

நம் காலத்தின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான, இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்பு மகத்தானது. அடிமட்டத்தில் பணியாற்றியதில் இருந்து நமது துணைப் பிரதமராக நாட்டுக்குச் சேவை செய்வது வரையிலான வாழ்க்கை அவருடையது. அவர் நமது உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் தன்னை சிறப்பித்துக் கொண்டார். அவரது நாடாளுமன்றத் தலையீடுகள் எப்பொழுதும் முன்னுதாரணமானவை, வளமான நுண்ணறிவுகள் நிறைந்தவை.

எல்.கே.அத்வானி - பிரதமர் மோடி
IND vs ENG | கமெண்ட்ரியில் இருந்து பாதியில் வெளியேறிய கவாஸ்கர் - பின்னணியில் சோகமான நிகழ்வு!
எல்.கே.அத்வானி - பிரதமர் மோடி OLD image
எல்.கே.அத்வானி - பிரதமர் மோடி OLD image

பொது வாழ்வில் அத்வானி ஜியின் பல தசாப்த கால சேவையானது, அரசியல் நெறிமுறைகளில் ஒரு முன்மாதிரியான தரத்தை அமைத்து, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் குறிக்கப்பட்டது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை மேம்படுத்துவதற்கு அவர் இணையற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். அவருடன் பழகுவதற்கும், அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் எண்ணற்ற வாய்ப்புகள் கிடைத்ததை நான் எப்போதும் எனது பாக்கியமாகக் கருதுவேன்" எனப் பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

எல்.கே.அத்வானி - பிரதமர் மோடி
”அந்த அச்சம் இருக்கும்வரை அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான்”.. வரலாற்றை மாற்றிய அண்ணா!

எப்போது தொடங்கப்பட்டது பாரத ரத்னா விருது?யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளது?

இந்தியாவில் வழங்கப்படும் உயர்ந்த சிவிலியன் விருது பாரத ரத்னா. பாரத ரத்னா விருது ஜனவரி 2, 1954 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மூலம் தொடங்கப்பட்டது. 1954-ல் முதன் முதலாக பாரத ரத்னா விருதுசுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் சி.ராஜகோபாலாச்சாரி, குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் விஞ்ஞானி டாக்டர் சி.வி.ராமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. முதலில் உயிரோடு இருப்பவர்களுக்கு மடும் என இருந்தது பின்னர் இறப்புக்குப் பின்னும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்படலாம் என மாற்றப்பட்டது.

1966ம் ஆண்டு முதன் முதலாக இறப்புக்குப் பின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்களான ராஜாஜி (1954), காமராஜர் (1976), மற்றும் (எம்.ஜி.ஆர். 1988) ஆகியோடு பாரத ரத்னா விருது இதுவரை வழங்கப்பட்டிருக்கிறது.

பாரத ரத்னா விருது இந்தியா தாண்டி உலக அளவில் சிறப்பாக சேவை ஆற்றுபவர்களுக்கும் வழங்கப்படும். அந்த வகையில் இதுவரை கான் பாகிஸ்தானின் அப்துல் கபார்கான் (1987), தென்னாப்ரிக்காவின் நெல்சன் மண்டேலா (தென் ஆப்பிரிக்கா 1990) ஆகிய இரு வெளிநாட்டவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

என்ன சலுகை கிடைக்கும்?

பாரத ரத்னா விருது பெறுவோருக்கு அதற்கான சான்றிதழும் பதக்கமும் வழங்கப்படும். விருதை பெற்றவர்களுக்கு பணம் ஏதும் வழங்கப்படாது என்றாலும் அரசு துறைகள் சார்பாக ரயில்வே துறை சார்பில் இலவச பயணத்துக்கான வசதி உள்ளிட்ட சில வசதிகள் வழங்கப்படுகிறது.

அரசின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், குடியரசு முன்னாள் தலைவர், துணைப் பிரதமர், தலைமை நீதிபதி, லோக்சபா சபாநாயகர், மத்திய அமைச்சர், மாநில முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

யார் இந்த அத்வானி? பிரதமர் மோடியின் தேர்தல் வியூகமா இது?

சமீபத்தில் ராமர் கோயில் திறப்பு விழா மிகவும் விமர்சையாக நடத்தப்பட்டது. ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதற்காக 1990களில் மிகப்பெரிய அளவில் ரத யாத்திரை மேற்கொண்டவர் எல்.கே.அத்வானி. ராமர் கோயில் விழாவிற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் கலந்து கொள்ளவில்லை.

  • இந்தியாவின் 7வது துணைப் பிரதமர் (5 பிப்ரவரி 2002 - 22 மே 2004)

  • உள்துறை அமைச்சர்

  • எதிர்க்கட்சித் தலைவர் (லோக்சபா) (மே 2004 - டிசம்பர் 2009), (1989-1993)

  • பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சர் (29 ஜனவரி 2003 - 21 மே 2004)

  • நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் (1 ஜூலை 2002 - 25 ஆகஸ்ட் 2002)

  • எதிர்க்கட்சித் தலைவர் (ராஜ்யசபா) (ஜனவரி 1980 - ஏப்ரல் 1980)

  • தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் (24 மார்ச் 1977 - 28 ஜூலை 1980)

  • காந்திநகர் நாடாளுமன்ற உறுப்பினர் (1998 இல் பதவியேற்றார்)

1980 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டு 1984ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த போது அக்கட்சிக்கு கிடைத்தது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே. இருப்பினும் அடுத்த 14 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தது பாஜக. இந்த குறுகிய காலத்தில் ஆட்சியை பிடிக்க வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் மிகவும் முக்கிய பணியாற்றினார்கள். அதுவும் இந்துத்துவா கொள்கையை முன்னெடுத்து ராம ஜென்ம பூமியை ஒரு இயக்கமாகே அத்வானி கட்டமைத்தது அவர்கள் வட மாநிலங்களில் மிகப்பெரிய ஆதரவு அலையை கொடுத்தது. அதனால், வாஜ்பாய்க்கு பிறகு பிரதமராக அத்வானி வருவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், நரேந்திர மோடி பிரதமர் ஆனதோடு மட்டுமல்லாமல் அதன் பிறகு அத்வானி ஓரம் கட்டப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. சமீப காலம் வரையிலும் அந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதரத்னாவிருதும் - பாஜக அரசு மீதான விமர்சனமும்

ஒவ்வொரு அரசாங்கம் வரும் பொழுதும் அவர்கள் சிந்தனையோடு ஒத்துப்போகிறவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவதாக விமர்சனங்கள் எழுவதுண்டு. அந்த வகையில் பாஜக அரசு மீதும் பாரத ரத்னா விருது வழங்குவதில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. 2015ம் ஆண்டு வழங்கப்பட்ட மதன் மோகன் மால்வியா, வாஜ்பாய் போன்றோர் பாஜகவோடு நேரடியாக தொடர்புடையவர்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான பிரனாப் முகர்ஜிக்கும் தங்களுடைய ஆதரவு நிலைப்பாட்டிற்கு வந்ததால் பாரத் ரத்னா வழங்கியதாக கூறப்பட்டது. நானாஜி முஷ்தேக்கை (பாரதிய ஜன சங்கம்) தொடர்ந்து தற்போது எல்.கே.அத்வானியும் நேரடியாக பாஜகவோடு தொடர்புடையவர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com