பெங்களூரு நகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகி கொண்டே இருக்கின்றன. போக்குவரத்து போலீசாரும், சிக்னல்களில் பொருத்தியுள்ள கேமராக்கள், தங்கள் மொபைல் போன் மூலம் படம் எடுத்து, விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அதேபோல் பொது மக்களும், யாராவது விதிகளை மீறினால், தங்களது மொபைல் போனில் படம் எடுத்து அவர்களும் புகார் பதிவு செய்யலாம்.
இந்நிலையில், ஆர்.டி.நகரின் அருகே ஒரு ஸ்கூட்டி பெப் பிளஸ் வாகன ஓட்டி ஹெல்மெட் அணியாமல் சென்றதை, சிக்னலில் பொருத்தப்பட்டிருந்த கேமரா கண்களில் பட்டுள்ளது. அதை படம் பிடித்த கேமரா, கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளது. போலீசார் சோதனை செய்த போது, அந்த வாகனம் 643 முறை போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார்கள் பதிவாகி உள்ளன.
இதையடுத்து அந்த வாகனத்திற்கு, 3.22 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் மொத்த விலை, 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே. ஆனால், அதை விட ஐந்து மடங்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அந்த வாகன ஓட்டியை போக்குவரத்து போலீசார் தேடி வருகின்றனர்.