பெங்களூரு | “பட்டாசு மீது உட்கார்ந்தா புது ஆட்டோ” - நண்பர்களின் சவாலை ஏற்றவருக்கு நேர்ந்த சோகம்!

பெங்களூருவில் நண்பர்கள் விடுத்த சவாலை ஏற்று வெடிக்கும் பட்டாசு மீது அமர்ந்த நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு
பெங்களூருஎக்ஸ் தளம்
Published on

கர்நாடக மாநிலம் பெங்களூரு கோணன்குண்டே பகுதியைச் சேர்ந்தவர் சபரி (32). இவர், அப்பகுதியில் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி இரவு தனது நண்பர்களுடன் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடியுள்ளார். அந்தச் சமயத்தில், அவருடைய அனைத்து நண்பர்களும் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது நண்பர்கள், சபரியிடம் “பட்டாசு வெடிக்கும்போது அதன்மீது அமர்ந்து இருந்தால், உனக்கு புதிதாக ஒரு ஆட்டோ பரிசாக வழங்குகிறோம்” எனச் சவால் விடுத்துள்ளனர். ஆட்டோவிற்கு ஆசைப்பட்ட சபரியும் நண்பர்களின் சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார். இதையடுத்து நண்பர்கள் கொண்டு வந்திருந்த பெரிய பட்டாசு மீது அமர்ந்து கொண்டார்.

அப்போது ஆறு நண்பர்களும் சேர்ந்து அதன் திரியைக் கொளுத்தி விட்டுவிட்டு, அவர்களுடைய பாதுகாப்பிற்காக அங்கிருந்து தூரச் சென்றுள்ளனர். அடுத்த சில விநாடிகளில் அந்த பட்டாசு பயங்கர சத்தத்துடன் வெடித்த நிலையில் அதன் அதிர்வுகள் தாங்க முடியாமல் சபரி அதே இடத்தில் படுகாயங்களுடன் கீழே சரிந்து விழுந்தார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

பெங்களூரு
தீபாவளி கொண்டாட்டம்.. பட்டாசு விபத்தால் 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - மருத்துவமனைகளில் சிகிச்சை!

படுகாயம் அடைந்த சபரியை உடனடியாக அவரது நண்பர்கள் அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீஸார், அந்த 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர். பெங்களூருவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: “சரியில்லை எனில், அந்த துறையையும் நானே ஏற்பேன்” - உள்துறை அமைச்சரை கடுமையாக விமர்சித்த பவன் கல்யாண்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com