தொழில்நுட்ப வசதிகள் எந்த அளவுக்கு நமக்கு உதவியாக இருக்கும் என்பது இக்கட்டான சூழலில்தான் தெரிந்துகொள்ள முடியும் என்பது பெங்களூருவில் கணவன் ஒருவர் மனைவியால் நேர்ந்த சம்பவத்தின் மூலம் உணர்ந்திருக்கிறார்.
வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுக்க காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவி அந்த நபருக்கு உதவியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படி என்ன நடந்தது என்பதை காணலாம்.
இல்லறத்தை மீறிய உறவுகள் பலவும் வெளி வந்தாலும் அதிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் மீள்வது கடினமானதாகவே இருக்கும். நேசித்தவர்களால் மோசம் போய்விட்டோமே என்ற எண்ணம் நீங்கா வடுவாகவே இருக்கும். அதன்படி பெங்களூருவைச் சேர்ந்த ஒருவருக்கு தன்னுடைய காரில் பொருத்தப்பட்ட GPS கருவி மூலம் மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததை அறிந்து அதிர்ந்துப் போயிருக்கிறார்.
நைட் ஷிப்ட் வேலைக்குச் செல்வதால் வீட்டில் இருக்கும் காரில் பொருத்தப்பட்ட GPS அந்த கணவனின் ஸ்மார்ட் ஃபோனிலும் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனை எதேர்ச்சையாக பார்த்த போதுதான் மனைவியின் செயல் அவருக்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் காரில் ஜிபிஎஸ் இருக்கிறது என்பதை அறிந்திராக அந்த மனைவி வழக்கம் போல தன்னுடைய காதலனுடன் சென்று வந்திருக்கிறார்.
இது குறித்து பேசியுள்ள அந்த கணவர், “கடந்த ஆண்டு நான் இரவு பணியில் இருந்த போது யாரோ ஒருவர் என்னுடைய காரை எடுத்துச் சென்றதை GPS டிராக்கர் மூலம் அறிந்தேன். அப்போது நள்ளிரவில் ஒரு ஹோட்டலுக்கு என் காரில் சென்றிருக்கிறார்கள். பிறகு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் வீட்டுக்கே வந்திருக்கிறது.
இதனையடுத்து குறிப்பிட்ட அந்த ஹோட்டலுக்கு சென்று விசாரித்த போதுதான் என் மனைவியும், அவரது காதலனும் அறை எடுத்து தங்கியது தெரிய வந்தது.” எனக் கூறியுள்ளார்.
அதன் பின்னர் இது பற்றி நேரடியாகவே மனைவியிடம் கேட்டபோது காதலனுடன் சேர்ந்து கணவனை மிரட்டியிருக்கிறார் அப்பெண். இதனால் வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தை நாடி விவரத்தை சொன்னதும் மஹாலக்ஷ்மிபுரம் போலீசாருக்கு தகவல் செல்ல அவர்கள் இதன் பேரில் அந்த மனைவி மீது வழக்கு பதிந்திருக்கிறார்.
இதனால் அந்த பெண் கர்நாடகாவிலேயே தலைமறைவாக இருக்கிறார் என போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். இருப்பினும் அவரை தேடும் பணியை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். 2014ம் ஆண்டு திருமணமான இந்த தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.